Advertisement

பொய்ச்செய்திகள் வெளியிட்ட நியூயார்க் டைம்சுக்கு முதல் பரிசு – டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

பொய்ச்செய்திகள் வெளியிட்ட ஊடகங்களுக்கான விருதுகளை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ஊடகங்கள் உண்மையை மறைத்தும் திரித்தும் செய்திகள் வெளியிடுவதாகவும், பொய்ச்செய்திகளை வெளியிடுவதாகவும் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார்.

பொய்ச்செய்திகள் வெளியிட்ட ஊடகங்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். அதன்படி பொய்ச்செய்திகள் வெளியிட்டதில் முதலிடத்தை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் பெற்றதாக டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். நியூயார்க் டைம்சின் செய்தியாளர் பால் கிரக்மேன், டொனால்டு டிரம்பின் மாபெரும் வெற்றியால் அமெரிக்கப் பொருளாதாரம் இனி எப்போதுமே மீட்சியடையாது எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

ஏபிசி நியூஸ் இரண்டாம் பரிசு பெற்றுள்ளதாகவும், சிஎன்என் மூன்றாம் பரிசு பெற்றுள்ளதாகவும், டைம் இதழ் நான்காம் பரிசு பெற்றுள்ளதாகவும் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். வாஷிங்டன் போஸ்ட் இதழுக்கு ஐந்தாம் பரிசு எனக் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன