பேரறிவாளனை விடுவிக்க மத்திய அரசு விரும்புகிறதா? – இரு வாரங்களில் பதிலளிக்குமாறு உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளனை விடுவிக்க மத்திய அரசு விரும்புகிறதா என இரு வாரங்களில் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையின் போது, தாம் வாங்கிக் கொடுத்த இரண்டு 9 வோல்ட் பேட்டரிகளை எதற்காக பயன்படப் போகிறது என தமக்குத் தெரியாது என பேரறிவாளன் கூறியதாகவும், ஆனால் அவரது வாக்குமூலத்தில் இருந்து அந்த பகுதியை தாம் நீக்கிவிட்டதாகவும் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

எந்த நோக்கத்திற்கு பேட்டரி வாங்கப்பட்டது என்பது பேரறிவாளனுக்குத் தெரியாது என்பது, பொட்டு அம்மானுக்கு சிவராசன் 1991ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி அனுப்பிய வயர்லெஸ் செய்தி மூலமும் உறுதிப்படுத்தப்பட்டதையும் தியாகராஜன் சுட்டிக்காட்டியுள்ளார். அக்டோபர் 27ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தியாகராஜன் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரம் மீது உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட, பேரறிவாளன் வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், பேரறிவாளன் வாங்கிக் கொடுத்த பேட்டரிதான் வெடிகுண்டு தயாரிக்க பயன்பட்டது என்பது கூட ஊகம்தான் என்றும் கோபால் சங்கரநாராயணன் கூறினார். இதையடுத்து, பேரறிவாளனை விடுவிப்பதை மத்திய அரசு ஒப்புக் கொள்கிறதா என 2 வாரங்களில் பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன