Advertisement

பேனர் கடை உரிமையாளரை தாக்கியதாக புதுமுக நடிகர் கைது

சென்னையில் விளம்பர பேனர் கடை உரிமையாளரை தாக்கியதாக புதுமுக நடிகர் ஒருவரை போலீசார் கைது செய்து தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். ராயபுரத்தை சேர்ந்த நிரஞ்சன் என்பவர், நீதான் ராஜா, ஒற்றையடி வீரன் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படங்களின் விளம்பரத்திற்காக பேனர்கள் தயாரிக்க, ராயபுரத்தில் உள்ள சாகுல் அமீது என்பவரின் கடையில் ஆர்டர் கொடுத்துள்ளார். குறிப்பிட்ட தேதியில் பேனர்களை கொடுக்காததால், தம்மை நிரஞ்சன் சரமாரியாக தாக்கியதாக சாகுல் அமீது ராயபுரம் போலீசில் கடந்த மார்ச் மாதம் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த நிரஞ்சனை, போலீசார் இன்று அவரது வீட்டிலேயே நுழைந்து கைது செய்து இழுத்துச் சென்றனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன