பேக்கரி தீவிபத்தில் கட்டிட உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு

சென்னை கொடுங்கயூர் தீவிபத்து குறித்து, கட்டிட உரிமையாளர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் தமைறைவாக உள்ள அவர்களைத் தேடி வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு கொடுங்கையூர் பேக்கரி ஒன்றில் சிலிண்டர்கள் வெடித்த விபத்தில், தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தார். கடை உரிமையாளர் ஆனந்த் உள்பட சுமார் 50 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் மைக்ரோவேவ் அவனின் சுவிட்ச் அணைக்காமல் இருந்ததால் மின்கசிவு ஏற்பட்டு, எண்ணெய் பொருட்கள், சமையல் எரிவாயு மூலம் பதவியது கண்டறியப்பட்டது.

அஜாக்கிரதையாக செயல்பட்டதாக பேக்கரி உரிமையாளர் ஆனந்த் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில், தீயணைப்பு விதிமுறைகள் பின்பற்றவில்லை எனக்கூறி, கட்டிட உரிமையாளர்கள் ராம் காந்தி, மற்றும் அவரது சகோதரி நாக ரத்தினம் மீதும் வழக்குப்பதியப்பட்டு தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன