Advertisement

பெருந்துறை அருகே காளிங்கராயன் கால்வாய் வெட்டப்பட்டதன் ஆண்டு விழா

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த வெள்ளோட்டில் காளிங்கராயன் கால்வாய் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதன் 735வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. காளிங்கராயன் சிலைக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர்ப்பாசன ஆதாரமாக விளங்கும் இந்த கால்வாய் லிங்கையன் என்ற காளிங்கராயன் என்பவரால் கி.பி.1283ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. சுமார் 90 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் இந்த கால்வாயால் 15 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் தற்போதும் பாசன வசதி பெறுகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன