Advertisement
Advertisement

பெரம்பலூர், ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

தம்மை ஆபாசமாக படம் எடுத்து அதை இணையத்தில் வெளியிடப்போவதாக மிரட்டும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.

அருகிலிருந்த காவலர்கள் அவரை மீட்டு விசாரணை செய்ததில், அவர் திருமாந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. தனது வீட்டருகே ஸ்டுடியோ நடத்தி வரும் வெற்றிவேல் என்ற நபர் தான் குளிக்கும்போது தன்னை வீடியோ எடுத்துவிட்டதாகக் கூறினார். அந்த வீடியோவை வைத்து மிரட்டி, தன்னிடம் இருந்து 16 சவரன் நகை மற்றும் 2 லட்ச ரூபாய் பணம் பறித்துள்ளதாகவும் மேலும் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் தெரிவித்தார். எனவே அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன