Advertisement

பெரம்பலூர் அருகே தனியார் ஆம்னி பேருந்து விபத்து – 6 பேர் படுகாயம்

பெரம்பலூர் அருகே தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எறையூர் சர்க்கரை ஆலை சின்னாறு பகுதியில் சென்னையிலிருந்து மதுரையை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென நிலைதடுமாறிய பேருந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் ஏறி எதிர் திசையில் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர், நடத்துனர் உட்பட 6 பேர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். போலீசார் நடத்திய விசாரணையில் தனியார் பேருந்தின் ஓட்டுநர் கண்ணயர்ந்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன