பெண் காவலரிடம் மசாஜ் செய்து கொண்ட காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட்

தெலுங்கானா மாநிலத்தில் காவல்துறை அதிகாரிக்கு ஊர்க்காவல்படை பெண் காவலர் மசாஜ் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. ஜொகுலாம்பா கத்வால் மாவட்டத்தில் உள்ள ஆயுத காவல் படை தலைமையகத்தில், துணை உதவி ஆய்வாளரான முகமது ஹசனுக்கு சீருடையில் உள்ள ஒரு பெண் காவலர் முதுகு பிடித்து விடும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.

வீடியோ உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியானதையடுத்து இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன