பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றிய வழக்கில், திருச்சி முன்னாள் துணை மேயர் மேல்முறையீடு

பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றிய வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி திருச்சி முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா தொடர்ந்த வழக்கில், பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தன்னை நாடகத் திருமணம் செய்து கர்ப்பிணியாக்கி ஏமாற்றியதாக துர்கேஸ்வரி என்ற பெண் தொடர்ந்த வழக்கில் ஆசிக் மீராவுக்கு30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை 10 ஆண்டுகளில் ஏக காலத்தில் அனுபவிக்கவும் ஆசிக் மீராவின் மாமியார் மைமூன் ஷரிபாவுக்கு 12ஆண்டுகள் சிறைத் தண்டனையை 10 ஆண்டுகளில் ஏக காலத்தில் அனுபவிக்கவும், நண்பர்கள் வி.எஸ்.டி.பாபு, சரவணன் ஆகியோருக்கு 7ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தண்டனைக்கு எதிரான ஆசிக் மீரா உள்ளிட்டோரின் மேல் முறையீட்டு மனுவின் பேரில் திருச்சி பொன்மலை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன