Advertisement

பெண்கள் கழிவறைக்கு தவறுதலாக நுழைந்த ராகுல் காந்தி

குஜராத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தவறுதலாக பெண்கள் கழிவறைக்குள் நுழைந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

டவுன் ஹால் செல்லும் வழியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. குஜராத் மொழியில் பெண்கள் கழிவறை என்று எழுதப்பட்டிருந்த போதிலும், ராகுல் காந்திக்கு குஜராத்தி மொழி தெரியாததால் அவர் பெண்கள் கழிவறைக்குள் நுழைந்து விட்டதாக கூறப்படுகிறது.

உள்ளே சென்ற சில நொடிகளில் ராகுல் காந்தி வெளியே வந்ததைக் கண்டதும், அங்கு கூடி இருந்த அனைவரும் நகைப்பில் ஆழ்ந்தனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன