பெட்ரோல், டீசல் விலை உயர்வை நியாயப்படுத்தி அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தனம் கருத்து

கார், பைக் வைத்திருப்பவர்கள் பட்டினி கிடப்பவர்கள் இல்லை என்றும், பெட்ரோல், டீசல் எவ்வளவு விலைக்கு விற்றாலும் அவர்களால் சமாளிக்க முடியும் என்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தனம் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசால் வரியாக வசூலிக்கப்படும் பணம் ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே செலவிடப்படுகிறது என்பதை உணர வேண்டும் என்றார். சுமையைத் தாங்குபவர்களுக்கே வரி விதிக்கப்படுகிறது என்றும், கார், பைக் வைத்திருப்பவர்களால், பெட்ரோல், டீசல் விலை உயர்வையும் சமாளிக்க முடியும் என்றும் அவர் கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், அதிகாரிகளை அமைச்சர்கள் ஆக்கினால், மக்கள் படும் துன்பங்கள் அவர்களுக்கு எப்படி தெரியும் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!