பெட்ரோல், டீசல் மீது அதிக வரிச்சுமை செலுத்தி மத்திய அரசு பொதுமக்களை தண்டித்து வருகிறது – ராகுல் காந்தி

பெட்ரோல் டீசல் மீது அதிக வரிச்சுமையைச் செலுத்தி மத்திய அரசு பொதுமக்களை தண்டித்து வருவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அமைச்சர் கே ஜே அல்ஃபோன்ஸ், கார் பைக் வைத்திருப்பவர்கள் யாரும் பசியால் வாடிக்கொண்டிருப்பவர்கள் இல்லை என்றும் அவர்களால் பெட்ரோல் டீசலை அதிக விலை கொடுத்து வாங்க முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் டுவிட்டர் பதிவிட்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அவசர கதியில் கொண்டு வரப்பட்ட ஜி எஸ் டி ஆகியவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை தற்போது பெட்ரோல் டீசல் மீது அதிக வரி விதித்து மத்திய அரசு தண்டித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன