பெங்களூருவில் உள்ள பேருந்து நிலையத்திற்கு தந்தை பெரியாரின் பெயர் – கர்நாடகா அமைச்சர்

பெங்களூருவில் உள்ள ஒரு பேருந்து நிலையத்திற்கு தந்தை பெரியாரின் பெயர் சூட்டப்படும் என கர்நாடகா அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.

தலித் ஷங்கர்ஷ சமிதி என்ற அமைப்பு சார்பில் நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார். மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவும், சமூகநீதிக்காகவும் பெரியார் நடத்திய போராட்டங்களை நினைவு கூர்ந்த அமைச்சர் ராமலிங்க ரெட்டி, பெங்களூருவில் உள்ள ஒரு பேருந்துநிலையத்திற்கு பெரியார் பெயரைச் சூட்ட கர்நாடக அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார். இதற்கான சட்ட மசோதா கர்நாடக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன