Advertisement

பெங்களூரில் தமிழர்கள் வைத்திருந்த பேனர்கள் கிழிப்பு

பெங்களூரில் தமிழர்கள் வைத்திருந்த பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்தெறிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான, அல்சூர், சிவாஜி நகர் அருகே உள்ள புலிகேசி நகர், சகாயபுரம், டேனரி ரோடு((Tannery Road)) உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்களால் வைக்கப்பட்ட, அதிமுக பேனர்களை அகற்றிய கன்னட அமைப்பினர், நார் நாராக கிழித்தெறிந்தனர்.

பொங்கல் வாழ்த்து சொல்லும் வகையில், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழ் திரைப்பட நடிகர்களின் படங்களுடன், தமிழ் மக்களால் வைக்கப் பட்டுள்ள பேனர்களையும், தமிழில் வைக்கப்பட்ட பேனர்களையும் கிழித்து, அவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். சில இடங்களில் தமிழர்களின் வாகனங்களும் கல்வீசி தாக்கப்பட்டன.

இந்நிலையில், பெங்களூர் சகாயபுரம் வார்டு கவுன்சிலராக உள்ள தமிழரான, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு எதிரான போராட்டம் என்றும் சொல்லப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன