Advertisement

பூமி தட்டையானது என நிரூபிக்க விரும்பும் கார் ஓட்டுநர்

அமெரிக்காவிலுள்ள கார் ஓட்டுநர் ஒருவர் பூமி தட்டையானது என நிரூபிக்கும் வகையில் தானே தயாரித்த ராக்கெட்டில் வளிமண்டலத்திற்கு செல்லப்போவதாக தெரிவித்துள்ளார்.

கலிஃபோர்னியாவின் ஆப்பிள் வேலி பகுதியைச் சேர்ந்த 61 வயது கார் ஓட்டுநரான ((Mike Hughes)) மைக் ஹியூகெஸ், பூமி தட்டையானது என நம்பும் குழுவினருடன் சேர்ந்து இந்த திட்டத்திற்காக (($20,000)) 13 லட்ச ரூபாய் நிதியைத் திரட்டியுள்ளார். பழைய இரும்பு சாமான்களில் இருந்து தானே வடிவமைத்த நீராவியில் இயங்கும் ராக்கெட் மூலம் சனிக்கிழமை வளிமண்டலத்திற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கலிஃபோர்னியாவில் உள்ள ((Mojave Desert)) மொஜவே பாலைவனத்தில் இருந்து மணிக்கு 500 மைல் வேகத்தில் செல்லும் என தான் நம்பும் ராக்கெட்டில் உயிரைப் பணையம் வைத்து இந்த முயற்சியில் இறங்குகிறார். 1,800 அடி உயரத்தில் இருந்து புகைப்படம் எடுக்க இருப்பதாகவும், பூமி தட்டையானது என நீருபிக்க, தான் எடுக்கும் முதல் கட்ட முயற்சி இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன