Advertisement

பூமியைப் போன்ற கடல்களைக் கொண்ட டைட்டன் – காசினி கலம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் நாசா முடிவு

சனிக்கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான டைட்டனில் ((Titan)) பூமியைப் போன்றே கடல்கள் சீரான மட்டத்தில் பரவியிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. பூமி முழுவதும் ஈர்ப்பு விசை காரணமாக கடல் மட்டம் ஒரே சீராக பரவியிருப்பதைப் போன்று, டைட்டனிலும் கடல்கள் உள்ளன. ஆனால் இவற்றில் தண்ணீருக்கு பதிலாக மீத்தேன் போன்ற நீர் ஹைட்ரோ கார்பன்கள் இருப்பாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டில் சனிக்கிரகத்துடன் மோதிய காசினி விண்கலம் கடைசியாக எடுத்து அனுப்பிய தரவுகளின் அடிப்படையில் இந்த கூற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன