Advertisement

புதுக்கோட்டை: வயலில் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி நபர் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே வயலில் போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தவரின் உறவினர்கள், வயல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாந்தம்பட்டியைச் சேர்ந்த முருகேசன், அவரது வயலுக்குச் செல்லும் வழியில் ரங்கசாமி என்பவரது வயலில் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவரது உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த ஆலங்குடி காவல்துறையினர், ரெங்கசாமி தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வழக்கை திசை திருப்ப முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து உயிரிழந்த முருகேசனின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன