புதிய குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவிற்கான ராணுவ வீரர்கள் ஒத்திகை

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள குடியரசுத் தலைவரின் பதவி ஏற்பு விழாவிற்கான ஒத்திகை நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.

விஜய் சவுக் பகுதியில் இன்று காலை நடைபெற்ற குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவிற்கான ஒத்திகை நிகழ்ச்சியில் ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.பதவி ஏற்பு நாளன்று புதிய குடியரசுத் தலைவரை, சம்பிரதாய முறைப்படி ராணுவ வீரர்கள் நாடாளுமன்றத்திற்கு ஊர்வலமாக அழைத்து வருவார்கள். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

பின்னர், புதிய குடியரசுத் தலைவருக்கு அவரது மாளிகை முன்பு முப்படை வீரர்களின் ராணுவ மரியாதை அளிக்கப்படும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!