Advertisement

புதிதாக 70 மணல் குவாரிகள் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்-ஈஸ்வரன்

தமிழக அரசு புதிதாக 70 மணல் குவாரிகள் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு மலேஷிய மணல் விற்பனையை அனுமதிக்குமாறு கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

விலையை குறைக்க புதிய மணல் குவாரிகளை அமைப்பதாக கூறுவது ஏற்புடையது அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார். வரம்பை மீறி மணல் அள்ளப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய சில ஆண்டுகள் ஆற்றுப்படுக்கைகளில் மணல் அள்ளுவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய சூழ்நிலையில் தமிழகத்தில் புதிய மணல் குவாரிகள் அமைப்பது வருங்கால சந்ததிகளுக்கு பேராபத்து என்று அவர் கூறியுள்ளார்.

மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்யும் வாய்ப்பு உள்ள நிலையில் மண்ணின் வளத்தை சுரண்டுவதிலேயே தமிழ ஆட்சியாளர்கள் குறியாக இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன