Advertisement
Advertisement

பீகாரில் ஏழைமக்கள் எலிக்கறி தின்னும் நிலை – சமூகப் பணியாளர் சுதா வர்க்கீஸ்

பீகார் மாநிலத்தில் ஏழைமக்கள் எலிக்கறி தின்னும் நிலை உள்ளதாகச் சமூகப் பணியாளர் சுதா வர்க்கீஸ் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் முசாகர்ஸ் என்னும் பெயரிலான தலித் இனத்தைச் சேர்ந்த மக்கள் 25லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். மண் சுவர்களும் வைக்கோல் வேய்ந்த கூரையும் கொண்ட வீடுகளில் வாழ்ந்து வரும் இந்த மக்களுக்கு ஒருமாதத்தில் சில நாட்கள் தான் கூலிவேலை கிடைக்கிறது. அதில் கிடைக்கும் குறைந்த கூலியைக் கொண்டு பிழைக்க வேண்டியுள்ளதால் வேலையில்லாத நாட்களில் உணவுக்காக எலியைப் பிடிப்பதும் இவர்களின் தொழிலாக உள்ளது. எலியைப் பிடித்துக் குடலை அகற்றிவிட்டுச் சுட்டுத் தின்பதும், குடலை அகற்றித் தோலை உரித்துவிட்டு எலிக்கறியைச் சமைத்து உண்பதும் இவர்களின் வழக்கம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன