Advertisement
Advertisement

பிரேசிலில் கின்னஸ் சாதனைக்காக ஒரே நேரத்தில் பிரம்மாண்டமாக பாலத்தின் மீதிருந்து குதித்து ஊஞ்சலாடிய இளைஞர்கள்

பிரேசில் நாட்டில், கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியாக, ஒரே நேரத்தில் 245 பேர் பாலத்தின் மீதிருந்து குதித்து ஊஞ்சல் ஆடினர்.

ஹார்டலேன்டியா ((HORTOLANDIA)) என்ற நகரில் உள்ள பாலத்தின் மீது திரண்ட அவர்கள், முன்னேற்பாடாக கயிறுகளைக் கட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

பின்னர் ஒரே நேரத்தில் பாலத்தின் மீதிருந்து தாவிக்குதித்து கூச்சலிட்டவாறே ஊஞ்சல் ஆடினர்.

இந்தக் காட்சிகளை முறையாக படமாக்கி கின்னஸ் சாதனைப் புத்தக நிர்வாகிகளுக்கு அனுப்பப் பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதேபோல, 149 பேர் மரண ஊஞ்சல் ஆடினர். ஆனால், இந்த ஆபத்தான விளையாட்டை கின்னஸ் நிர்வாகிகள் இன்னும் சாதனை என ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன