பிரான்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரன் இந்தியா வர உள்ளார்

பிரான்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரன் இந்தியா வர உள்ளார்.

டிசம்பர் மாதம் எட்டு ஒன்பது ஆகிய தேதிகளில் டெல்லியில் சூரிய சக்தி ஒத்துழைப்பு மாநாட்டு நடைபெற உள்ளது. இதன் துவக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் பிரான்சு அதிபர் (Emmanuel Macron) இம்மானுவேல் மேக்ரன் கலந்துகொள்வார் என பிரான்சு தூதர் (Alexandre Ziegler) அலெக்சாண்ட்ரே ஜீக்லர் தெரிவித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரிஸ் பருவநிலை மாநாட்டின்போது பிரதமர் மோடி முன்மொழிந்த சூரிய சக்தி ஒத்துழைப்புத் திட்டத்திற்கு 100 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சர்வதேச தரத்திலான ஒத்துழைப்பு, ஆராய்ச்சி, மற்றும் மேம்பாட்டுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன