பிரதமர் மோடி விரைவில் ஓமன் பயணம்

பிரதமர் நரேந்திர மோடி விரைவில் ஓமன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓமனில் ஆட்சி செய்யும் சுல்தான் காபூஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், தனது உறவினரான சயீத் அசாத் பின் தாரிக் அல் சயித்தை துணைப் பிரதமராக நியமித்துள்ளார். இந்நிலையில், பிரதமரின் ஓமன் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியா- ஓமன் இடையே பல ஆண்டுகளாக நட்புறவு நீடித்து வருவதால், இதனை மேம்படுத்தும் விதமாக பிரதமரின் பயணம் அமையும் எனவும், கோதுமை, அரிசி, சர்க்கரை ஏற்றுமதி தொடர்பான ஒப்பந்தங்கள் அப்போது கையெழுத்தாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன