பிரதமர் மோடியின் பிறந்தநாள் நாளை கொண்டாட்டம்

பிரதமர் மோடிக்கு நாளை 67வது பிறந்தநாள் என்பதால், அதனை உற்சாகமாகக் கொண்டாட பாஜகவினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இதையொட்டி, மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என்று துண்டுச்சீட்டுகளை விநியோகிக்கும் பா.ஜ.க.வினர்,பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர். பிரதமர் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் உட்பட ஏராளமான பாஜகவினர் டெல்லியின் இந்தியா கேட், மும்பையின் ஜூஹூ கடற்கரை உள்பட 15 சுற்றுலாத் தலங்களில் இரண்டு மணி நேரம் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இதனிடையே, சூரத்தில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்கள் கண்கவரும் நடன நிகழ்ச்சிகளை நடத்தினர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன