பிரதமர் மோடிக்கு பூங்கொத்துக்கள் வழங்க வேண்டாம் : உள்துறை அமைச்சகம்

பிரதமர் மோடிக்கு இனி பூங்கொத்துக்கள் வழங்கக் கூடாது என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 2016-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதம மந்திரி ஆப்-பில், பூங்கொத்துக்களைத் தவிர்க்குமாறு குடிமக்கள் சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து கடந்த ஆண்டு பூங்கொத்துக்கு பதில் புத்தகங்கள் வழங்கலாம் என மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியிருந்தார். பூங்கொத்துக்கள் ஒரு சில நாட்களில் குப்பைக்கு போய்விடும் என்றும் அதற்கு பதில் கதர் கைக்குட்டை வழங்கினால், அத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஏழைகள் செழிப்படைவார்கள் என்றும் கூறியிருந்தார். மேலும், புத்தகங்களையும் வழங்கினால் வாசிப்பு பழக்கம் மேம்படும் எனவும் தெரிவித்து இருந்தார்.

மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதை அடுத்து திங்கட்கிழமை நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்த பிரதமர் மோடிக்கு ரோஜா பூக்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, அனைத்து மாநிலங்களுக்கும் ஆணை பிறப்பித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், இந்தியாவுக்குள் பிரதமர் மோடி செல்லும் நிகழ்ச்சிகளுக்கு பூங்கொத்துக்கள் வழங்க வேண்டாம் என்றும், கதர் கைக்குட்டை மற்றும் புத்தகங்கள் வழங்கலாம் என்றும் கூறியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன