Advertisement

பிப்ரவரி 21 முதல், அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தமது அரசியல் பயணத்தை தொடங்குகிறார் கமல்

பிப்ரவரி 21ம் தேதி ராமநாதபுரத்தில் இருந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ள கமல்ஹாசன் ராமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தமது அரசியல் சுற்றுப் பயணத்தைத் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனந்தவிகடன் இதழில் தமது விருப்பத்தைக் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், நல்ல தமிழகம் குறித்த கனவுகளை கலாம் விட்டுச் சென்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதே போன்ற கனவுகள் தமக்கும் உள்ளதாக கூறியுள்ள கமல்ஹாசன், தமிழக மக்கள் மேம்பாட்டுக்காகவே தாம் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். திராவிடம் என்பது தமிழ்நாடு தழுவியது மாத்திரமல்ல, அது நாடு தழுவியது என்றும் கமல்ஹாசன் தமது கருத்தை அதில் பதிவு செய்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன