பாலிமர் செய்தி எதிரொலி – சிதிலமடைந்த ஆண்டிபட்டி அரசு பள்ளிக்கட்டிடம் இடிப்பு

ஆண்டிபட்டி அருகே இடிந்து விழும் நிலையில் இருந்த கொட்டோடைபட்டி அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம், பாலிமரில் செய்தி வெளியானதை தொடர்ந்து, ஆட்சியரின் உத்தரவின் பேரில், உடனடியாக இடிக்கப்பட்டது.

கொட்டோடைபட்டி அரசு தொடக்கப்பள்ளியில், 60 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை அடிக்கடி பெயர்ந்துவிழுவதுடன், எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற சூழல் இருப்பதாக செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, தேனி மாவட்ட ஆட்சியர் வெங்காடசலம், சிதிலமடைந்த பள்ளிக்கட்டிடத்தை உடனடியாக இடிக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, புதன்கிழமை காலை, கொட்டோடைபட்டி அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது.

தற்காலிகமாக, வனத்துறைக்குச் சொந்தமான கட்டிடத்தில் பள்ளி செயல்படத் தொடங்கியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன