பாலாற்று வெள்ளப்பெருக்கால் ஆம்பூர் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்

தொடர் கனமழை காரணமாக பாலாற்றில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆம்பூர் எல்மாங்குப்பம் தரைப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், தேவலாபுரம் பாலத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பேத்தமங்கலம் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால், பாலாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மதகுகளில் வழியாகச் சீறிப்பாய்ந்து வரும் தண்ணீரால், பாலாற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பாலாற்றில் திறக்கப்பட்டுள்ள நீர் தமிழக – ஆந்திர எல்லையான புல்லூர் பகுதியில் உள்ள ஆந்திர தடுப்பணையை கடந்து, தமிழக பகுதியான அம்பலூரை வந்தடைந்துள்ளது. அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து கடந்து செல்லும் வெள்ளத்தால், அம்பலூர் – எக்லாசபுரம் இடையே சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அவ்வழியாக கடக்க வேண்டிய பள்ளி மற்றும் அரசுப் பேருந்துகள் காவல்துறையால் பாதுகாப்பு கருதி திருப்பி அனுப்பப்பட்டது.

வாணியம்பாடி பகுதியில் மூன்றாக பிரிந்து, வளையாம்பட்டு பகுதியில் ஒன்றிணையும் பாலாற்றில் வாணியம்பாடி சி.எல் கிளை பாலாற்று தரைபாலத்தின் மீது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வாணியம்பாடி பாலாற்றில் அணைத்து கண்களிலிலும் சீறிப்பாயும் பாலாற்று வெள்ளம் ஆம்பூர் எல்மாங்குப்பம் – பஜார் பகுதி தரைபாலத்தை மூழ்கடித்து செல்கிறது. இதனால் தேவலாபுரம் மேம்பாலம் வழியாக, போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேவலாபுரம் பாலத்தில் மீது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

One Response to பாலாற்று வெள்ளப்பெருக்கால் ஆம்பூர் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்

  1. Udhayakumar சொல்கிறார்:

    நீண்ட நாட்களுக்கு பிறகு பாலாற்றில் பால் போன்ற வெள்ளம் மக்கள் மகிழ்ச்சி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன