பாரதியார் பிறந்த நாளை பத்திரிக்கையாளர் தினமாக அறிவிக்கும் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும்-கடம்பூர் ராஜு

மகாகவி பாரதியார் பிறந்த நாளை பத்திரிக்கையாளர் தினமாக அறிவிக்கும் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசினார்.

அப்போது பாரதியார் பிறந்த நாளை பத்திரிக்கையாளர் தினமாக அறிவிக்க கோரும் கோரிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, இதுகுறித்து தமிழக அரசு பரிசீலனை செய்யும் என்று தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன