பாதுகாப்பு விதிகளை பின்பற்றியிருந்தால் சிறுவனின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கும் – சிபிஎஸ்இ

டெல்லி அருகே குருகிராமில் தனியார் பள்ளியில் 7 வயது சிறுவனின் கொலை தவிர்க்கப்பட்டிருக்கலாம் என சிபிஎஸ்இ கூறியுள்ளது.

7 வயது சிறுவன் பிரத்யுமன் ரியான் இன்டர்நேஷனல் பள்ளியின் கழிப்பறையில் கழுத்தறுக்கப்பட்டு துடிக்கதுடிக்க கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு அப்பள்ளிக்கு சிபிஎஸ்இ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், போதிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால், சிறுவனின் கொலை தவிர்க்கப்பட்டிருக்கக் கூடும் என சிபிஎஸ்இ கூறியுள்ளது. இருநபர் குழு நடத்திய ஆய்வறிக்கையின்படி, பள்ளியில் பல பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், பள்ளியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்பது குறித்து விளக்கமளிக்குமாறும் சிபிஎஸ்இ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!