Advertisement
Advertisement

பாசன வசதிக்காக சாத்தனூர் அணை திறக்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் சாத்துனூர் அணை நிரம்பியதையெடுத்து, நேற்று முன்தினம் தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் மூங்கீல்துறைப்பட்டு, மணலூர்பேட்டை வழியாக இன்று எல்லீஸ்சத்திரம் தெண்பெண்னையாற்றில் ஓடியது.

அங்குள்ள அணைக்கட்டு நிரம்பியதும், 7 கதவுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

பாசனத்திற்கு போதிய தண்ணீரின்றி பெரிதும் கவலையில் இருந்த விவசாயிகள் தற்போது தென்பெண்ணையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இருப்பினும் 450 கிராமங்கள் விவசாய பாசன வசதி பெறும் வகையில், தண்ணீரை சேமிக்க தடுப்பணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன