இந்தியாவுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள விருப்பம் – பாகிஸ்தான்

பாகிஸ்தான் இந்தியாவுடன் அமைதி மற்றும் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள உண்மையான விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் அது சாத்தியப்படவில்லை என்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ((Javed Bajwa)) ஜாவேத் பஜ்வா தெரிவித்துள்ளார்.

கராச்சியில் நடைபெற்ற பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் இந்தியாவும், மேற்கில் ஆஃப்கானிஸ்தானும் அந்நாட்டின் ராணுவத்திற்கு சவாலாக விளங்குவதாக தெரிவித்தார்.

எனினும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்தியாவுடன் இயல்பான உறவையும் அமைதியான நல்லுறவையும் ஏற்படுத்திக்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் அது சாத்தியப்படவில்லை என்றும் பஜ்வா தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன