பாகிஸ்தானில் கடலோர காவல்படையினரால் 4,800 கிலோ போதைப் பொருள்கள் எரித்து அழிப்பு

பாகிஸ்தானில் கடலோர காவல்படையினரால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள், போதைப்பொருள்கள் அழிக்கப்பட்டன. அந்நாட்டில் கடலோர காவல்படையினரால் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட மதுவகைகள், கஞ்சா போன்ற போதைப் பொருள்களை அழிப்பதை விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

கராச்சியில் நடந்த விழாவில், ஒரே நேரத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் ரோலர் வாகனம் ஏற்றப்பட்டு அழிக்கப்பட்டன. 4 ஆயிரத்து 800 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்களை கடலோர காவல்படையினர் தீ வைத்து கொளுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன