Advertisement

பாகிஸ்தானில் இல்லாத திட்டங்கள் தமிழகத்தில் உள்ளது – ஆர்.கே. நகரில் செல்லூர் ராஜூ அதிரடி பிரசாரம்

பாகிஸ்தானில் இல்லாத திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுவதாக சென்னை ஆர்.கே. நகர் தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். சென்னை, ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் வாக்கு சேகரித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ஆளுங்கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு கோசமிட்டபடியே சென்ற அமைச்சர் செல்லூர் ராஜூ , வழியில் ஒரு இஸ்லாமிய பெரியவரை மறித்து தாங்கள் செய்துள்ள நலதிட்டங்களை விவரித்து வாக்கு கேட்டார்.

அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரனுடன் வாக்கு சேகரித்த நடிகை வாசுகி அமைச்சரின் பெயரை தவறாக உச்சரித்து பின்னர் திருத்திக்கொண்டார்.

கோவை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி தனது கலை குழுவினருடன் ஜமாப் அடித்து வாக்கு சேகரித்தார்.

மற்றொரு பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட மகளிரணியினர் உற்சாக மிகுதியால் குத்தாட்டம் போட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன