பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய இஸ்லாமிய மதகுருமார்கள் பேட்டி

தங்களை கடத்திச் சென்றவர்கள் மரியாதையாக நடத்தியதாக, பாகிஸ்தானிலிருந்து திரும்பிய இஸ்லாமிய மதகுருக்கள் தெரிவித்துள்ளனர். டில்லியில் உள்ள தர்காவின் தலைமை மதகுரு சையத் ஆசிப் அலி நிசாமி, நசீம் அலி நிசாமி ஆகியோர் பாகிஸ்தானின் லாகூர் நகருக்குச் சென்றபோது திடீரென மாயமாகினர். ஐ.எஸ்.ஐ. உளவுப்படையிடம் பிடிபட்டிருந்த அவர்கள், இந்திய அரசின் முயற்சியின்பேரில் மீட்கப்பட்டு, நேற்று டில்லி வந்து சேர்ந்தனர். பின்னர், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு நேரில் நன்றி கூறிய அவர்கள் செய்தியாளர்களுடன் பேசினர். அப்போது, தாங்கள் முகத்தை மூடி அழைத்துச் செல்லப்பட்டபோதும், அவமதிக்கப்படவில்லை என்றனர். தேநீர், பிஸ்கெட்டுகள் வழங்கப்பட்டு உபசரிக்கப் பட்டதாகவும் மதகுருமார்கள் கூறினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன