பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மீண்டும் அவகாசம் அளிக்க முடியாது – மத்திய அரசு

பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற, மீண்டும் அவகாசம் அளிக்க முடியாதென உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த வழக்கில், சரியான காரணம் இருப்பவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவது குறித்து பரிசீலித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த 4-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவே பழைய உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டதெனவும், அவற்றை மாற்றிக் கொள்ள போதி கால அவகாசமும் வழங்கப்பட்டதெனவும் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் வாய்ப்பு அளித்தால், கருப்புப்பணத்தை ஒழிக்கும் நோக்கம் நிறைவேறாமல் போய்விடும் என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன