Advertisement
Advertisement

பள்ளி மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த அவலம் – புகைப்பட ஆதாரத்துடன் பெற்றோர் புகார்

திருப்பூரில், அரசு ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில், பள்ளி மாணவிகளை வைத்தே கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக, புகைப்பட ஆதாரத்துடன், காவல்துறையினரிடம் பெற்றோர் புகார் அளித்திருக்கின்றனர்.

திருப்பூர் ராயபுரம் பகுதியில், அரசு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி உள்ளது. இங்கு தங்கி படிக்கும் மாணவிகளை, விடுதி காப்பாளராக உள்ள சங்கீதா என்பவர், கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியுள்ளார். மேலும், விடுதி காப்பாளர் சங்கீதா, பள்ளி மாணவிகளை சமையல் செய்யும் பணிக்கும் வற்புறுத்தியுள்ளார். இதுகுறித்து புகைப்பட ஆதாரங்களுடன், அங்கும் பயிலும் மாணவி ஒருவரின் பெற்றோர், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து விடுதிக்கு வந்த காவல்துறையினர், விடுதி காப்பாளர், மாணவிகளின் விசாரணை மேற்கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன