Advertisement

பள்ளி மாணவிகளுக்கு அச்சுறுத்தலாக இயங்கி வரும் தனியார் “பார்”

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் அரசுப் பள்ளிக்கு அருகிலேயே இயங்கிவரும் தனியார் பாரை (bar) மூடவேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. ஊரின் மையப் பகுதியான வைகை அணை சாலையில் இயங்கிவரும் ரூபி பாருக்கு (bar) அருகில் அரசுப் பள்ளி உள்ளது. அதிகாலை முதல் நள்ளிரவு வரை இயங்கும் அந்த பாரில் இருந்து குடித்துவிட்டு வெளியே வருவோர் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, தனியார் பாரை உடனடியாக இங்கிருந்து அகற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன