Advertisement
Advertisement

பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து இயக்குவது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து இயக்குவது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் படியில் தொங்கி கொண்டும், ஐன்னல் மீது ஏறி நின்றும் பயணம் செய்யும் புகைப்படங்கள் நாளிதழ்களில் வெளிவந்தன. அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவு அமைக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவர் முறையீடு செய்தார். அப்போது இது தொடர்பாக மனு தாக்கல் செய்ய உத்தரவிடுமாறும் பின்னர் பதில் மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அரசுத் தரப்பில் கோரப்பட்டது. அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தாமாக முன்வந்து பொதுநல வழக்கு பதிவு செய்வதாகத் தெரிவித்தனர். மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அவர்களுக்கு சிறப்பு பேருந்து இயக்குவது குறித்து தலைமைச்செயலாளர், போக்குவரத்துத்துறை செயலாளர் மற்றும் ஆணையர் ஆகியோர் நாளை பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன