Advertisement
Advertisement

பம்பை ஆற்றில் விடப்படும் துணிகளை மறுசுழற்சி செய்து விற்க முயன்ற இருவர் கைது

பம்பை ஆற்றில் விடப்படும் துணிக் கழிவுகளை தேனிக்கு கொண்டு வந்து மறு சுழற்சி செய்து விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரியை சேர்ந்த ஜெயகுமார், செல்வராஜ் ஆகிய சகோதரர்கள் இருவரும், சபரிமலை பம்பை ஆற்றில் பக்தர்கள் பூனித நீராடிவிட்டு அவிழ்த்து விடும் பழைய துணிகளை சேகரித்து தேனி அருகே லட்சுமிபுரத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

சருத்துப்பட்டியில் வீடு வாடகைக்கு எடுத்து, வேலையாட்களை கொண்டு துணியை மறுசுழற்சி செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் புகார் கூறவே, தென்கரை போலீசார் இருவரையும் கைது செய்தனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன