Advertisement

பனியின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து கார் – நொடிப் பொழுதில் தப்பித்த Tow வாகன ஓட்டுநர்

அமெரிக்காவில், காரை பறிமுதல் செய்யச் சென்ற tow வாகனத்தின் ஓட்டுநர், கார் மோதுவதில் இருந்து ஒரு நொடியில் தப்பிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மிச்சிகனில் பனிப்பொழிவின் காரணமாக, இரு கார்கள் மோதி விபத்துக்குள்ளாகின. அந்தக் கார்களை மீட்பதற்காக டோ வாகனத்தின் ஓட்டுநர் அவற்றின் அருகே சென்றார். அப்போது அதிவேகமாக வந்த கார், சாலையில் படர்ந்திருந்த பனியின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து, ஏற்கெனவே விபத்துக்குள்ளாகி நின்று கொண்டிருந்த கார்கள் மீது மோதியது. கார் மோத வருவதைக் கண்ட டோ வாகனத்தின் ஓட்டுநர் நொடிப் பொழுதில் தப்பித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன