பனிசூழ்ந்த அண்டார்டிகாவில் மணம் முடித்த முதல் காதல் ஜோடி

பனிசூழ்ந்த அண்டார்டிகாவில் திருமணம் செய்துகொண்ட முதல் ஜோடி என்ற பெருமையை இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு ஜோடி பெற்றுள்ளது. இங்கிலாந்தின் ஷெஃப்பீல்டு ((Sheffield)) பகுதியைச் சேர்ந்த டாம் சில்வஸ்டர், ஜூலி பரூம் ஆகிய இருவரும் அண்டார்டிகாவின் அடிலைடு தீவில் ((Adelaide)) ஆராய்ச்சியாளர்களாக உள்ளனர்.

காதலர்களான இவர்கள், வித்தியாசமான இடத்தில் திருமணம் செய்து கொள்ள விரும்பி, பனிசூழ்ந்த அண்டார்டிகாவை தேர்வு செய்தனர். இதற்காக இங்கிலாந்து அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று அண்டார்டிகாவில் இங்கிலாந்து ஆய்வுப் பகுதியான ரோதேரா ஆய்வு நிலையம் உள்ள பகுதியில், திருமணம் செய்து கொண்டனர். சக ஆராய்ச்சியாளர்களின் முன்னிலையில் நடந்த இந்த திருமணம், அண்டார்டிகாவில் நடந்த திருமணம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

One Response to பனிசூழ்ந்த அண்டார்டிகாவில் மணம் முடித்த முதல் காதல் ஜோடி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன