பனமரத்துப்பட்டி ஏரியை சுற்றுலா தளமாக்க ஆட்சியர் ரோகிணி தகவல்

சேலம் அருகே புதர்மண்டி கிடக்கும் ஏரியை தூர் வாரி சுற்றுலா தளமாக மாற்ற, ஆட்சியர் ரோகிணியிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

சுமார் இரண்டாயிரத்து 800 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழிலுடன் காட்சியளித்த பனமரத்துப்பட்டி ஏரி, அதன் நீர்வழித்தடங்கள் அழிக்கப்பட்டதால் வறண்டதோடு, சீமை கருவேல மரங்கள் நிறைந்து, நாளடைவில் பயனற்றுப் போனதாக பொதுமக்கள் கூறியிருந்தனர். இந்நிலையில், அந்த ஏரியை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆய்வு செய்ய சென்றார்.

அப்போது ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்கு பூங்கா அமைத்து சுற்றுலாத் தளமாக மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் ரோகிணி உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *