Advertisement

பத்மாவத் படத்தைத் திரையிட 3 மாநில அரசுகள் மறுப்பு – உச்சநீதிமன்றத்தில் படக்குழுவினர் சார்பில் முறையீடு

தீபிகா படுகோன் நடித்து 190 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட பத்மாவத் படத்தைத் திரையிட குஜராத், ராஜஸ்தான் மாநில அரசுகள் தடை விதித்திருப்பதையடுத்துஹரியானா அரசும் தடையை அறிவித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தை நாடிய படக்குழுவினர் தணிக்கை செய்யப்பட்ட திரைப்படத்தைத் தடை செய்வது சட்டவிரோதமானது என்று மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.மத அடிப்படைவாத மற்றும் சமூக விரோதிகளின மிரட்டல்களுக்கு மாநில அரசுகள் பணிந்து படத்தைத் திரையிட மறுப்பதாக படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன