Advertisement

பத்மாவத் திரைப்படத்தை வெளியிட தடை இல்லை – உச்சநீதிமன்றம்

பத்மாவத் இந்தி திரைப்படத்திற்கு 4 மாநில அரசுகள் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. இப்படத்தை ஜனவரி 25ம் தேதி திரைப்படத்தை வெளியிட முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ராணி பத்மாவதியை அவதூறாக சித்தரித்துள்ளதால் படம் திரையிடப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்ச ஏற்படும் என்று குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநில அரசுகள் தடை விதித்தன.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தை நாடிய படக்குழுவினர் தணிக்கை செய்யப்பட்ட திரைப்படத்தைத் தடை செய்வது சட்டவிரோதமானது என்று மனுதாக்கல் செய்தனர். இம்மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், 4 மாநில அரசுகளின் உத்தரவிற்கு தடை விதித்தது. திரைப்படம் வெளியிடப்படும் போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன