பண மோசடி செய்த நபரை துரத்திய பெண்கள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பண மோசடி செய்த நபரை பெண்கள் துரத்திய போது, அவர் கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.

ராசிபுரம் அடுத்த தொட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் வேல்சாமி.

இவர் கொல்லிமலை பயில்நாடு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் சிலரிடம், வங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வசூலித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் வங்கிக் கடன் பெற்றுத் தராமலும், வாங்கிய பணத்தை திருப்பி தராமலும் வேல்சாமி காலம் கடத்தியதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள், தொட்டிப்பட்டிக்கு சென்று வேல்சாமியிடம் முறையிட்டுள்ளனர். அப்போது அவர்களிடம் இருந்து தப்பிச் செல்வதற்காக ஓடிய வேல்சாமி, கொண்டப்பன்நாயக்கர் என்பவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

கிராம மக்கள் தகவல் அளித்ததின் பேரில் அங்கு வந்த காவல் மற்றும் தீயணைப்புத்துறையினர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேல்சாமியை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன