Advertisement
Advertisement

பட்டேல் சமூக இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்ற காங். வாக்குறுதி-ஹர்த்திக் பட்டேல்

பட்டேல் இனத்தவரின் இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி உறுதி அளித்திருப்பதுடன், அதனை தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்யவும் வாக்குறுதி தந்திருப்பதாக, PAAS அமைப்பின் தலைவர் ஹர்த்திக் பட்டேல் கூறியிருக்கிறார்.

தங்கள் அமைப்பு அரசியல் இயக்கம் அல்ல என்று தெரிவித்த ஹர்த்திக் பட்டேல், PAAS அமைப்பு சமூக நீதி இயக்கம் என்று கூறியிருக்கிறார். தொகுதிகளை கேட்டு காங்கிரசிடம் பிடிவாதம் செய்வதாக தங்கள் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாஜக பரப்புவதாகவும், சீட்டுக்காக அலைவது தங்களது வேலை அல்ல என்றும் ஹர்த்திக் பட்டேல் தெரிவித்திருக்கிறார்.

இட ஒதுக்கீடு கோரி பட்டேல் சமூகத்தவர் போராடிய போது, அதனை வாபஸ் பெற வைப்பதற்காக, ஆளும் பாரதிய ஜனதா கட்சி, ஆயிரத்து 200 கோடி ரூபாய் பேரம் பேசியதாக ஹர்த்திக் பட்டேல் கூறியிருக்கிறார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன