Advertisement
Advertisement

நேபாளத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

நேபாளத்தில் இரண்டாம் மற்றும் இறுதிக் கட்டமாக இன்று மாகாணச் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

நேபாளத்தில் 32மாவட்டங்களில் முதற்கட்டமாக நவம்பர் 26ஆம் தேதி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இன்று இரண்டாம் மற்றும் இறுதிக்கட்டமாக 45மாவட்டங்களில் உள்ள 128 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 256மாகாணச் சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை ஐந்து மணிக்கு முடிவடையும். இன்றைய தேர்தலில் நாடாளுமன்றத் தொகுதிகளில் 1663பேர் போட்டியிடுகின்றனர். சட்டமன்றத் தொகுதிகளில் 2819பேர் போட்டியிடுகின்றனர்.

ஒருகோடியே 22 லட்சம் பேர் வாக்காளர்களாக உள்ளனர். 15ஆயிரத்து 344 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ராணுவம், காவல்துறை ஆகியவற்றைச் சேர்ந்த 2லட்சத்துக்கு மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேபாளத்தில் புதிய அரசமைப்பை ஏற்படுத்துவதற்கான முதற்படியே இந்தத் தேர்தல் எனக் கருதப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடங்க உள்ளது குறிப்பிடத் தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன