நெல்லையில் ரூ.3 கோடி மதிப்பிலான பழைய நோட்டுகள் பறிமுதல்

நெல்லையில் இரும்பு வியாபாரியை மிரட்டி கொள்ளையடித்துச் சென்ற 3 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், 14 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த பால்ராஜ் இரும்பு வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் தம்மிடம் இருந்த 3 கோடி ரூபாய் பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஜெயபால் என்ற முகவரை அணுகி உள்ளார். நெல்லை வேப்பங்குளத்தில் உள்ள ஒருவரிடம் ரூபாய் நோட்டுகளை மாற்றித்தருவதாக ஜெயபால் கூறியதையடுத்து, நேற்று பால்ராஜ் பணத்தை எடுத்துக் கொண்டு காரில் நெல்லை வந்துள்ளார்.

வேப்பங்குளம் அருகே கார் வந்த போது மர்மநபர்கள் சிலர், வழிமறித்து பால்ராஜை அடித்துப் போட்டு விட்டு 3 கோடி ரூபாய் பழைய நோட்டுகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பால்ராஜ், தரகர் ஜெயபாலை தேடி மேலப்பாளையம் சென்றுள்ளார்.

இதற்கிடையே இந்த விவகாரத்தை அறிந்த போலுசார், மேலப்பாளையம் சென்று பணத்தை பறிகொடுத்த பால்ராஜ், ஏஜென்ட் என்று கூறப்படும் ஜெயபால் ஆகியோரை கைது செய்தனர். பணத்தை திருடிச் சென்ற கும்பலை போலீசார் தேடி வந்த நிலையில் அந்தக் கும்பலும் பிடிபட்டது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 14 பேரை கைது செய்து நெல்லை டவுன் போலீசார் கைது செய்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!