Advertisement
Advertisement

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை கருணை காட்டாமல் அகற்றக் உயர்நீதிமன்றம் உத்தரவு

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் கருணை காட்டாமல் நடவடிக்கை எடுக்க 13 மாவட்ட ஆட்சியர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், கதிரம்பட்டி கிராமத்தில் உள்ள பெரும்பள்ள ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். 19 மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை அளித்த நிலையில், அறிக்கை அளிக்காத 13 மாவட்ட ஆட்சியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக அவர்கள் தரப்பில் கூறப்பட்டது. அப்போது, கருணை காட்டாமல், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நவம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன